தாயின் பயமும் சேயின் வளர்ச்சியும்! (Baby growth and Development Stages)
ஆறு மாதமும் கடந்து விட்டது. என் செல்லக் குட்டி இன்னும் குப்புறப் போடவில்லை. என் பயம் எல்லை தாண்டி விட்டது. காரணம் "இன்னும் குப்புறப் போடவில்லையா?" என்ற உறவுகளின் கேள்விகள். முதல் குழந்தை வளர்ப்பு எல்லோருக்கும் பொதுவாக அச்சம் கலந்த எதிர்பார்ப்பைக் கொண்டது என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை. என் மகளுக்கு தலை நேராக நான்கு மாதங்கள் எடுத்தது. பொதுவாக பிள்ளைகள் நான்கு மாதத்தில் குப்புறப் போடுவார்கள். ஆனால் என் மகள் வளர்ச்சிப் படியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தாமதமாவே செய்தாள். யாரும் இன்னும் அது செய்யவில்லையா? இது செய்யவில்லையா? என்று கேட்கும் போது ஒருவித பயம் மனதை வாட்டும். அவ புட்டிப்பால் குடிப்பதனால் ஒவ்வொரு செயற்பாடும் லேட்டாகிறது போல என்று சொல்லி நானே என் பயத்தைப் போக்கிக் கொள்வேன். ஏழு மாதத்தில் குப்புறப் போட ஆரம்பித்தாள் என் தங்கம். அப்பாடா நிம்மதி. அதன் பிறகு உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தாள். ஒன்பதாவது மாதத்தில் பின்னுக்கு ரிவேரஸ் போய் பத்தாவது மாதத்திலிருந்து நன்றாக முன்னோக்கித் தவழ பழகிக் கொண்டாள். ஆரம்ப செயற்பாடுகள் பின்னாகப் பின்னாக நடத்தலும் பின்னுக்குப் போய்க் கொண்ட