சிறுநீரகக் கற்களை கரைக்கும் எளிய வீட்டு வைத்தியம் (Natural Ways of Remove Kidney Stone)

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பற்றி அறிந்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் அல்லது நண்பர்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பார்கள். அறுவைச் சிகிச்சை அல்லது கல் உடைப்பு மூலம் கற்கள் அகற்றப்படும். எனினும் மீண்டும் மீண்டும் கல் உருவாகிக் கொண்டே இருக்கும். 

இந்த சிறுநீரகக் கற்களை எளிய வீட்டு வைத்தியம் மூலமும் குணப்படுத்த முடியும்.
 சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதில் முக்கிய பங்கு வகிப்பது போதிய நீர் அருந்தாமையாகும். இதனால் சிறுநீரகத்தின் இயக்கம் பாதிக்கப்படும்.  


அத்தோடு நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, நீண்ட கால மருந்துப் பயன்பாடுகள், வலி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளல் என்பனவும் காரணமாகின்றது. 

ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 3 லீற்றர் நீர் அருந்துதல் வேண்டும். அதிகமான வேலைப்பழு காரணமாக மக்கள் இதனைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. எனினும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதன் தான் அந்த வேலையை சிறப்பாக செய்ய தனது ஆரோக்கியம் முக்கியம் என்பது பற்றி சிந்திப்பதில்லை. 

உணவே மருந்து!
மருந்தே உணவு!

எனும் கூற்றை சரியாகப் புரிந்து கொள்ளும் போது மனிதனின் வாழ்வு ஆரோக்கியம் பெறுகிறது. 

சிறுநீரகக் கற்களை கரைக்கும் இயற்கை உணவு முறைகள் பற்றி நோக்குவோம். 

👉 காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 லீட்டர் தண்ணீர் குடித்தல். 

ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தாலும் நாளடைவில் பழக்கப்படும். நீர் குடித்து அரை மணித்தியாலத்தின் பின்னரே வேறு உணவுகளை சாப்பிட வேண்டும். 

மாலை 6 மணிக்குள் மீதி 2 லீட்டர் நீரை பகுதி பகுதியாகக் குடித்தல். இரவில் அதிகளவு  நீர் குடிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல். 

👉 பின்வரும் உணவு முறைகளை இரண்டு வாரத்துக்கு தொடர்ந்து மாறி மாறி உட்கொள்ளல் வேண்டும். 

1. முள்ளங்கி சூப் (ராபு)
கால் கிலோ முள்ளங்கியை சுத்தப்படுத்தி 2 லீட்டர் நீர் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு வேக வைத்து அந்த சூப்பை சிறுநீரகத்தில் கல் உள்ளவர் முழுமையாகக் குடித்தல் வேண்டும்.

2. போஞ்சி சூப் (பீன்ஸ்)
கால் கிலோ போஞ்சியை சுத்தப்படுத்தி 2 லீட்டர் நீர் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள், மிளகுப் பொடி சேர்த்து நன்கு வேக வைத்து அந்த சூப்பை பாதிக்கப்பட்டவர் குடித்தல் வேண்டும்.

3. நூக்கல் சூப் (நோ கோல்)
கால் கிலோ நூக்கல் சூப் செய்து குடித்தல்
 வேண்டும்.

4. வாழைத் தண்டு சூப்
கால் கிலோ வாழைத் தண்டை நார் விட்டு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள், மிளகுப் பொடி சேர்த்து சூப் செய்து குடித்தல் வேண்டும். 

இவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என மாறி மாறி தொடர்ந்து இரு வாரங்களுக்கு பாதிக்கப்பட்ட நபர் குடித்து வருதல் வேண்டும். 

👍 மேற்கூறிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் 8 மில்லி மீற்றருக்கு குறைவாக உள்ள கற்கள் யாவும் இரண்டு வாரத்தில் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

👉 யானை நெருஞ்சில் இலை ஜூஸ்
யானை நெருஞ்சில் இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கழுவி சுத்தம் செய்து அதனை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் இட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இலைகளைப் பிழியாது  அகற்றி அந்த நீரை க்ளாஸினுள் வடி கட்டி ஜூஸை காலையில் ஒரு வாரம் அருந்த வேண்டும். இது பெரிய கற்களையும் கரைக்கும் வல்லமை கொண்டது. 


பெரிய கற்கள் கரைய ஒரு மாதம் வரை காலம் எடுக்கும். அத்தோடு கற்கள் பெரிதாகும் போது அதன் வலி பிரசவ வேதனையை விட அதிகமாக இருப்பதனால் அவற்றை  வைத்தியரின் சிபாரிசின்படி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிக் கொள்ள முடியும். 

எனினும் மீண்டும் கற்கள் வளராமல் இருக்க மேற்கூறிய உணவு முறைகளை வாரத்துக்கு இரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். 



வீட்டில் ஆண்கள் வேலை காரணமாக நேரம் இன்றி இருப்பதனால் குடும்பப் பெண்கள் இதனை முன்னின்று செய்து பழக்கப்படுத்துதல் வேண்டும். அதேபோல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்படல் அவசியம். சோம்பல் இன்றி செய்யின் நலம் கிட்டும்.

ஒருவன் தான் படிக்கவும் தொழில் செய்யவும் இன்னும் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உணவும் உணவு மூலமான ஆரோக்கியமும் முக்கியமானது. 

நோயின்றி வாழ்வோம்!


- ஜெம்ஸித் - 
   15.07.2022

Comments

Popular posts from this blog

ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)

சாரைப்பாம்பு! (Rat Snake)

மாட்டு வண்டியிலே! (Cart Jurney)