Posts

புளிச்சாக்குளமும் உடப்பு பீச்சும் (Pulichchakulam and Udappu Beach)

Image
உடப்பு என்றதும் பல்கலைக்கழக தோழி நித்திய வாணியே எப்போதும் நினைவுக்கு வருவாள். கெம்பஸ் இறுதியாண்டின் போது வாணியின் ஊரான உடப்புக்குச் சென்று அங்கு ஒருநாள் தங்கி உடப்பு பீச் வரை சுற்றிப் பார்த்த நினைவுகள் இன்னும்  மனக் கண் முன் நிழலாய் ஓடுகின்றது.  அன்றொரு ஞாயிற்றுக் கிழமை (18.09.2022) உடப்பை அண்மித்த ஊரான புளிச்சாக்குளம் நோக்கி எம் பயணம் ஆரம்பமானது. பயணம் சுமார் 60km தூரம் ஆன போதிலும் பிள்ளைகளுடன் மோட்டார் வண்டியில் நெடுந்தூரப் பயணமாகவே எனக்கு விளங்கியது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 11.30 புளிச்சாக்குளம் சென்றடைந்தோம். இரண்டரை மணித்தியாலப் பயணம் தான்.  பயணம்! பயணம்! என்று அலட்டுகிறேன். யார் வீட்டுக்கு என்று சொல்லவில்லையே! என் சகோதரி நிரோஷா நிஸாம் வீட்டுக்கான உறவுப் பயணம். அதாவது என் கணவரின் நானா வீட்டுக்கான பயணம். இது நான்காவது பயணம். எனினும் முன்னைய பயணங்களை விட விசேடமானது. பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம். ஆசைதீர விளையாடினார்கள். ஆதிப், ஆமிர் உடன் மனால், மர்யம் இருவரும் விளையாடி மகிழ்ந்தனர். மனாளின் நீண்ட நாள் கனவு புளிச்சாக்குளம் செல்லும் ஆசை. சுமார் மூன்று வருடங்களின் பின்னரே அன்று நாம் ச

தாயின் பயமும் சேயின் வளர்ச்சியும்! (Baby growth and Development Stages)

Image
ஆறு மாதமும் கடந்து விட்டது. என் செல்லக் குட்டி இன்னும் குப்புறப் போடவில்லை. என் பயம் எல்லை தாண்டி விட்டது. காரணம் "இன்னும் குப்புறப் போடவில்லையா?" என்ற உறவுகளின் கேள்விகள். முதல் குழந்தை வளர்ப்பு எல்லோருக்கும் பொதுவாக அச்சம் கலந்த எதிர்பார்ப்பைக் கொண்டது என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை.  என் மகளுக்கு தலை நேராக நான்கு மாதங்கள் எடுத்தது. பொதுவாக பிள்ளைகள் நான்கு மாதத்தில் குப்புறப் போடுவார்கள். ஆனால் என் மகள் வளர்ச்சிப் படியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தாமதமாவே செய்தாள்.  யாரும் இன்னும் அது செய்யவில்லையா? இது செய்யவில்லையா? என்று கேட்கும் போது ஒருவித பயம் மனதை வாட்டும். அவ புட்டிப்பால் குடிப்பதனால் ஒவ்வொரு செயற்பாடும் லேட்டாகிறது போல என்று சொல்லி நானே என் பயத்தைப் போக்கிக் கொள்வேன்.  ஏழு மாதத்தில் குப்புறப் போட ஆரம்பித்தாள் என் தங்கம். அப்பாடா நிம்மதி. அதன் பிறகு உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தாள். ஒன்பதாவது மாதத்தில் பின்னுக்கு ரிவேரஸ் போய் பத்தாவது மாதத்திலிருந்து நன்றாக முன்னோக்கித் தவழ பழகிக் கொண்டாள்.  ஆரம்ப செயற்பாடுகள் பின்னாகப் பின்னாக நடத்தலும் பின்னுக்குப் போய்க் கொண்ட

சிறுநீரகக் கற்களை கரைக்கும் எளிய வீட்டு வைத்தியம் (Natural Ways of Remove Kidney Stone)

Image
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பற்றி அறிந்திருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் அல்லது நண்பர்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பார்கள். அறுவைச் சிகிச்சை அல்லது கல் உடைப்பு மூலம் கற்கள் அகற்றப்படும். எனினும் மீண்டும் மீண்டும் கல் உருவாகிக் கொண்டே இருக்கும்.  இந்த சிறுநீரகக் கற்களை எளிய வீட்டு வைத்தியம் மூலமும் குணப்படுத்த முடியும்.  சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதில் முக்கிய பங்கு வகிப்பது போதிய நீர் அருந்தாமையாகும். இதனால் சிறுநீரகத்தின் இயக்கம் பாதிக்கப்படும்.   அத்தோடு நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, நீண்ட கால மருந்துப் பயன்பாடுகள், வலி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளல் என்பனவும் காரணமாகின்றது.  ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 3 லீற்றர் நீர் அருந்துதல் வேண்டும். அதிகமான வேலைப்பழு காரணமாக மக்கள் இதனைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. எனினும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதன் தான் அந்த வேலையை சிறப்பாக செய்ய தனது ஆரோக்கியம் முக்கியம் என்பது பற்றி சிந்திப்பதில்லை.  உணவே மருந்து! மருந்தே உணவு! எனும் கூற்றை சரியாகப் புரிந்து கொள்ளும் போது மனிதனின் வாழ்வு ஆரோக்கியம் பெறுகிறது

சாரைப்பாம்பு! (Rat Snake)

Image
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அது சாரைப் பாம்பாக இருந்தால் என்ன? நாகப் பாம்பாக இருந்தால் என்ன? அன்று காலை பத்து மணி போல் இருக்கும். நான் சின்னவளைத் தூங்க வைத்து விட்டு குசினியில் (Kitchen) வேலையாக இருந்தேன். மூத்தவள் வெளியே பின் வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.  அப்போது மூன்றரை வயதான என் மூத்தவள் என்னிடம் ஓடி வருகிறாள். வந்து, "உம்மி! என்னமோ வருது" என்றாள்.  "நாயா? பூனையா?" என்கிறேன் நான். "இல்லம்மா... பெரிய புழு ஒன்டு நெளிஞ்சு வருது" என்கிறாள். நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  எனினும் "எங்க?" என்று ஜன்னல் வழியாக வீட்டு வாசலைப் பார்க்கிறேன்.  புழுவைக் காணவில்லை.  "அதும்மா.. அங்க" என்கிறாள் மகள்.  சற்று கண்ணை உயர்த்தி முன்னே பார்க்கிறேன்.  எங்கள் வீட்டின் உள்ளு (தேங்காய் உரிக்க பயன்படும் உபகரணம்) இருந்த இடத்திலிருந்து ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து மெதுவாக வருகிறது.  கண்டதும் என் மேனியெல்லாம் சிலிர்த்து விட்டது.  "அது தான் பாம்பு" என்கிறேன் நான்.  "இது கோப்ரா இல்லையே? சின்ன பாம்பா? என்கிறாள். அவள் இரண்ட

மாட்டு வண்டியிலே! (Cart Jurney)

Image
மாட்டு வண்டியில் சென்ற அனுபவம் உங்களுக்கும் உண்டா? என் சிறு வயதில் அதாவது 10 வயதுக்குட்பட்ட காலப் பகுதியில் என் உம்மும்மா வீட்டிலும் வாப்பும்மா வீட்டிலும் மாட்டு வண்டிகள் இருந்தன.  எங்கள் ஊர் பாஷையில் மாட்டுக் கரத்தை என்றே அழைப்போம். மாட்டு வண்டியில் ஒற்றை, இரட்டை நாம்பன் வண்டிகள் காணப்படும். அபாரமான பொருட்களை ஏற்றியிறக்க இரட்டை நாம்பன் பயன்படும்.  என் வாப்பும்மா வீட்டில் ஒரு பெரிய வெள்ளை நாம்பன் மாடு கட்டப்பட்ட கரத்தை இருந்தது. அதில் நாங்கள் ஏறி பயணம் செய்த நினைவுகள் எனக்கில்லை. எனினும் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் போது அவற்றை ஏற்றி வருவதற்கும் விறகுகளை ஏற்றி வருவதற்கும் என் அப்பாவின் (வாப்பாவின் வாப்பா)  பயணங்களுக்கும் அதனைப் பயன்படுத்திய நினைவுகளே என்னுள் ஊசலாடுகின்றன.  சிறு வயதில் எங்கள் அப்பாவைக் கண்டாலே ஒருவிதப் பயம் எங்களுக்கு... அதனாலோ என்னவோ கரத்தையை நெருங்கிய அனுபவங்கள் எனக்கில்லை.  உம்மும்மா வீட்டிலும் பெரிய வெள்ளை நாம்பன் கறுத்த நாம்பன் மாடுகளைக் கொண்ட ஒற்றை நாம்பன் கரத்தை காணப்பட்டது. அங்கு முக்கியமாக தேங்காய் வியாபாரம் நடைபெற்றதனால் தேங்காய்களை ஏற்றி இறக்க கரத்தை பயன்பட

ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)

Image
 ஹஜ்ஜுப் பெருநாள்! அதுவே தியாகத் திருநாள்! ஹஜ் பெருநாள் என்றாலே நபி இப்றாஹிம், நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் குர்பானி அதில் விசேடமானது. என் சிறு பராயங்களில் எங்கள் ஊரில் குர்பானி பற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட முறைமைகள் காணப்படவில்லை.  அதனால் குர்பானியும் ஒழுங்காக அனைவருக்கும் போய்ச் சேராது. ஏனெனில் அன்று ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தத்தமது குர்பானிகளை நிறைவேற்றினர். பங்குகளை தாம் விரும்பியோருக்கு பங்கிட்டனர். இதனால் குர்பானிகள் சிலருக்கு தேவைக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கிடைக்காதும் இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எங்கள் குடும்பத்தில் அல்லது அக்கம் பக்கத்தில் யாராவது குர்பானி கொடுத்தாலே எங்களுக்கும் கிடைக்கும்.  இந்த நடைமுறையே எமது ஊரில் தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. எனினும் கடந்த இரண்டு வருடங்களாக இம்முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு குர்பானி அனைவருக்கும் சமமான முறையில் பங்கீடு செய்யும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பள்ளிவாசல் நிர்வாகம் குர்பானியைப் பொறுப்பெடுத்து குர்பானி கொடுக்க விருப்பமுடையவர்களை வருட ஆரம்பத்திலே

கிலி கொள்ளச் செய்த கடற் பயணம் (Scared Sea Jurney_Delft Island)

Image
இரண்டு வருடங்களுக்கு முன்... "இன்று காலை நெடுந்தீவு நோக்கிச் சென்ற கப்பல் பலத்த காற்று காரணமாக கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு. பலரைக் காணவில்லை. தேடுதல் பணி தொடர்கிறது. அதிகமான பொருட்களை ஏற்றிச் சென்றமையே விபத்துக்கான காரணம்".  மகள் மனாலைத்  தூங்க வைத்துக் கொண்டிருந்த என் காதில் இச்செய்தி விழுந்த போது ஒரு கணம் என் உடல் சிலிர்த்து நடுங்கியது. காரணம் இல்லாமல் இல்லை. 2018 மே மாத ஆரம்பப் பகுதி. என் அலுவலகத்தில் இருந்து களப் பணிக்கு யாழ்ப்பாணம் சென்றோம். தொகை மதிப்பீடு சம்பந்தமாக பிரதேச செயலகங்களுக்கு சென்று மேற்பார்வை செய்ய வேண்டிய பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து கடினமான இடங்களின் பணிகளை மாவட்ட செயலகத்தில் இருந்தும் செய்ய முடியும். சக அலுவலர்களுக்கு டெல்ப் (நெடுந்தீவு) செல்ல வேண்டும் என்ற ஆசை. ஏன் எனக்கும் தான். கப்பல், படகுப் பயணம் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு.   நான்கு முறை யாழ்ப்பாணத்துக்கு களப் பணிக்காகச் சென்றேன். இறுதியாக நான் சென்ற பயணத்தின் போது டெல்ப் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  அன்று காலை ஏழு மணிக்குச் செல்லும் கப்பலில் டெல்ப் செல்வதாக உத்தேசம். ந