புளிச்சாக்குளமும் உடப்பு பீச்சும் (Pulichchakulam and Udappu Beach)
உடப்பு என்றதும் பல்கலைக்கழக தோழி நித்திய வாணியே எப்போதும் நினைவுக்கு வருவாள். கெம்பஸ் இறுதியாண்டின் போது வாணியின் ஊரான உடப்புக்குச் சென்று அங்கு ஒருநாள் தங்கி உடப்பு பீச் வரை சுற்றிப் பார்த்த நினைவுகள் இன்னும் மனக் கண் முன் நிழலாய் ஓடுகின்றது. அன்றொரு ஞாயிற்றுக் கிழமை (18.09.2022) உடப்பை அண்மித்த ஊரான புளிச்சாக்குளம் நோக்கி எம் பயணம் ஆரம்பமானது. பயணம் சுமார் 60km தூரம் ஆன போதிலும் பிள்ளைகளுடன் மோட்டார் வண்டியில் நெடுந்தூரப் பயணமாகவே எனக்கு விளங்கியது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 11.30 புளிச்சாக்குளம் சென்றடைந்தோம். இரண்டரை மணித்தியாலப் பயணம் தான். பயணம்! பயணம்! என்று அலட்டுகிறேன். யார் வீட்டுக்கு என்று சொல்லவில்லையே! என் சகோதரி நிரோஷா நிஸாம் வீட்டுக்கான உறவுப் பயணம். அதாவது என் கணவரின் நானா வீட்டுக்கான பயணம். இது நான்காவது பயணம். எனினும் முன்னைய பயணங்களை விட விசேடமானது. பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம். ஆசைதீர விளையாடினார்கள். ஆதிப், ஆமிர் உடன் மனால், மர்யம் இருவரும் விளையாடி மகிழ்ந்தனர். மனாளின் நீண்ட நாள் கனவு புளிச்சாக்குளம் செல்லும் ஆசை. சுமார் மூன்று வருடங்களின் பின்னரே அன்று நாம் ச